இயலாநிலமை

"எவர் சுகாதாரநிலைமையின் காரணமாக நீண்ட காலத்திற்கு வேலை செய்ய முடியாத அல்லது பகுதிவாரியாக மட்டும் வேலை செய்யக்கூடியதாக உள்ளதோ நிபந்தனைக்குட்பட்ட ரீதியில் வலதுகுறைந்தோர் காப்புறுதியினால் (IV) பணஉதவி செய்யப்படலாம். இந்த IV பணம் செலுத்துவதுடன் நின்று விடாது, அவர்கள் மீண்டும் தொழில் வாழ்வில் இணைவதற்கு உறுதுiயாக இருக்கிறது. "

வலது குறைந்தோர் காப்புறுதி

வலது குறைந்தோர் காப்புறுதி (IV) ஓர் அரச நிறுவனம். பெரும்பாலான வயது வந்தோர் இதற்கு கட்டணம் கட்டுவர். இக்கட்டணம் தொழில் புரிவோரின் சம்பளத்திலிருந்து நேரடியாகக் கழிக்கப்படும், அத்துடன் வேலை வழங்குபவர் அரைவாசி செலுத்துவர். சொந்தத்தொழில் செய்பவர் அல்லது வேலை இல்லாதோர் சமூகசேவை காப்புறுதிகளில் (Sozialversicherungsanstalt, SVA) எப்படி தமது கட்டணங்களை செலுத்தலாம் என்பது பற்றி அறிவிக்க வேண்டும்.

வலதுகுறைந்தோர் காப்புறுதியின் ஆதரவுகள்

IV ஆதரவு பெறுவதற்கான நிபந்னையாக ஒருவர் குறைந்தது 1 வருடம் சுகாதார ரீதியாக (செயன்முறை அல்லது மனோநிலை) பாதிக்கப்பட்டு முற்றாக அல்லது பகுதிவாரியாக வேலை செய்யமுடியாத நிலையிலிருக்கவேண்டும். IV தன் ஆதரவை ஓர் மாதாந்த ஓய்வுதியமாக வழங்குகிறது. இதுவும் காப்புறுதிசெய்தவர் தனது பாதிப்பின் காரணமாக வேலைஉலகில் இணையமுடியாத நிலை ஏற்பட்டாலே கிடைக்கிறது. IV பாதிக்கப்பட்டவர் தனக்கேற்ற வேலை ஒன்றை பெற்றுக்கொள்ள உதவுகிறது. IV இன் ஆதரவுக்கு சமூகசேவை காப்புறுதிகளில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலதிக உதவிசேவைகள்

IV இன் ஆதரவில் வாழ்பவர்கள் தமது வாழ்வுக்கு பணம் குறைவாக இருக்குமிடத்து அவர்களின் நிலமையைப்பொறுத்து மேலதிக பொருளாதார உதவிக்கு (Ergänzungsleistungen) உரித்துடையவாகளாவர். இவர்கள் சமூகசேவைகள் கிளைக்காரியாலயங்களில் விண்ணப்பிக்க வேண்டும். இங்கு எவருக்கு இதற்கான உரிமை உள்ளது என்பது பற்றி தெளிவாக வரையறை செய்யப்பட்டுள்ளது. மேலதிக உதவிச்சேவையானது வரிசெலுத்துபவர்களினால் பணமுதலீடு செய்யப்படுகிறது.