கல்வியின் அர்த்தம்
நல்ல கல்வியும் தொழில் வாழ்வில் நல்ல வேலையும் ஒரு உயர்ந்த அர்த்தத்தைக் கொடுக்கும். கட்டாயப்பாடசாலையில் கிடைத்த திறமைகள் தான் எதிர்கால வசதி வாய்ப்புகளுக்கு முக்கியமாகும். கட்டாயப்பாடசாலை முடித்த இளையவர்களுக்குப் பலவிதமான வழிகள் திறந்துள்ளன. அதில் ஒரு நல்ல வழி அவர்கள் தொழில் வாழ்வில் தம்மை இணைப்பதாகும். (Sekundarstufe II) தொடர்ந்து கற்காமல் நல்ல வேலையை எடுப்பது கஸ்டம். இளையவர்கள் பெற்றோருக்கான கல்வி - பயிற்சி பற்றிய கேள்விகளுக்கு இலவச ஆலோசனையைப் பெற தொழில் தகவல் மையத்தை(Laufbahnzentrum LBZ) நாடலாம்.