சுவிஸில் 18 வயதானால் தான் திருமணம் முடிக்கலாம். ஒரே பாலினத்தவர்களும் திருமணம் செய்து கொள்ளலாம். யார் மணம்முடிக்க விரும்புகிறாரோ அவர் பதிவாளர் அலுவலகத்திற்குச் (Zivilstandsamt) சென்று அறிவிக்கவேண்டும். Basel-Landschaft பதிவாளர் அலுவலகம் Arlesheimஇல் உள்ளது. இது திருமண ஆயத்த நடைமுறையைத் தொடக்கி வைக்கும். இதன் போது மணம்முடிக்க விரும்புபவரின் துணையும் திருமண பந்தத்திற்கு ஏற்றவரா எனச்சரி பார்க்கப்படும். இந்த ஆயத்த நடைமுறை நடைபெற்று முடிந்து 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறவேண்டும். பதிவாளர் அலுவலகம் திருமண செயற்பாட்டிற்குத் தேவையான பத்திரங்களின் தகவலைத் தரும். மணம்முடிக்கப் போகும் துணை வெளிநாட்டிலிருந்தால் சுவிஸ் நாட்டிற்குள் வருவதற்குரிய அனுமதியைக் கேட்டு திருமண ஆயத்த நடைமுறையின் போது விண்ணப்பிக்க வேண்டும். போலித் திருமணம் (Scheinehe) என்ற சந்தேகம் இருந்தால், பதிவு அலுவலகம் திருமண விழாவை மறுக்க முடியும். இந்த வழக்கில், ஏற்கனவே முடிக்கப்பட்ட திருமணமும் செல்லாததாக அறிவிக்கப்படலாம் அல்லது குடியிருப்பு அனுமதி திரும்பப் பெறப்படலாம்.