குடும்பம் ஒன்றிணைதல்
சுவிஸில் வசிப்பவருடைய குடும்ப அங்கத்தவர் (நேரடி உறவினர் அல்லது வாழ்க்கைத்துணை) சுவிசிற்கு குடி பெயர்ந்து வருவது (குடும்ப ஒன்றிணைவு, Familiennachzug) அடிப்படையில் சாத்தியப்படும். குடும்பத்தில் எந்த உறுப்பினருக்கு அனுமதி கேட்கலாம் என்பது இங்கு வசிப்பவருடைய தேசிய இனம் வதிவிட உரிமையைப் பொறுத்துள்ளது. தற்காலிக வதிவிட உரிமை (அடையாள அட்டை F) உள்ளவர்கள் சில சூழ்நிலைகளில் தமது குடும்பத்தை இங்கு வரவழைக்கலாம். மாநில குடிவரவு மற்றும் சமூக உரிமைகள் திணைக்களம் (Amt für Migration, Integration und Bürgerrecht) விண்ணப்பம் சார்ந்த தேவையான பத்திரங்களின் தகவல்களை வழங்கி ஆயத்த நடைமுறைக்கு உதவுவது மட்டுமன்றி விண்ணப்பத்தின் முடிவையும் எடுக்கும். கவனத்திற்கு குடும்ப ஒண்றிணைவு ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியுள் விண்ணப்பிக்க வேண்டும். இது பிள்ளைகளுக்கு பெரியவர்களை விடக் குறைவான கால எல்லையாக இருக்கும் (உ.மாக வாழ்க்கைத்துனை).