குழந்தைகள் பகல் நேரப் பராமரிப்பகம் (KITA)
பகல் நேரம் முழுவதும் குழந்தைகளைப் பராமரிப்பது குழந்தைகள் பகல் நேரப் பராமரிப்பகம் (Kinderkrippen). இங்கு 3 மாதம் தொடக்கம் பாடசாலை வரையுள்ள பிள்ளைகள் ( பாடசாலைக்கு முன்னும் பின்னும் மற்றும் மதியமும்) பராமரிக்கப் படுவார்கள். இங்கு இடம் கிடைக்க நீண்ட காலம் காத்திருக்கவேண்டியிருப்பதால் பெற்றோர் இயலுமானவரை முன்கூட்டியே பதியவேண்டும். இதற்குச் செலுத்தவேண்டிய கட்டணம் ஒவ்வொரு இடத்திற்கும் வித்தியாசப்படும். அதன் ஒரு பகுதியை வதியும் கிராமசபை பொறுப்பெடுக்கும். குழந்தைகள் பகல் நேரப் பராமரிப்பகம் அல்லது வதியும் கிராமசபை இங்க பதியும் வசதிகளையும் கட்டணத்தையும் அறியத்தரும்.