வரிகள்

சுவிஸில் உள்ள வரிச்சுமை வதிவிடங்களில் தங்கியுள்ளது. ஒரு தனிப்பட்ட நபரின் வரிகள் வருமானம் சொத்து விற்பனைவரிகள் ஆகும்.

வரி வகைகள்

சுவிஸில் அரசு, மாநிலம், கிராமசபை மற்றும் உள்நாட்டுத் தேவாலயங்கள் அனைத்துக்கும் வரிகள் உள்ளன. நேரடி வரி, மறைமுக வரி என வேறுபடுத்தலாம். நேரடி வரியுள்; வருமானம் - சொத்துவரி அடங்கும். இதை நேரடியாக வரி செலுத்துபவர் செலுத்தவேண்டும். மறைமுக வரிகளாவன விற்பனைவரி, சிகரெட்வரி, கனிமஎண்ணெய் வரிகளாகும். இந்த வரிகள் பொருட்களின் விலைக்குள் அடங்கியிருக்கும்.அதிகமான வரிகளுக்கு மாநிலம் கிராமசபைகளே பொறுப்பான போதும் நேரடி வரிகளின் அளவு ஒவ்வொரு வதிவிடங்களுக்கும் வித்தியாசப்படும்.கணவன் மனைவி இருவருக்கும் ஒன்றாகவே வரி அறவிடப்படும்.

ஆதாரவரி

புதிதாகக் குடியேறிய வெளிநாட்டவர்களின் வருமானவரி நேரடியாக அவர்களின் சம்பளத்திலிருந்தே கழிக்கப்படும் (ஆதாரவரி, Quellensteuer). வேலை வழங்குபவரே தம்முடன் வேலை செய்பவர்களைப் பதிந்து கொள்வார்.

  • வரியின் அளவு வருமானம் குடும்பநிலை (தனியானவர் மணமானவர் மணவிலக்குப் பெற்றவர்) மற்றும் பிள்ளைகளின் எண்ணிக்கையைப் பொறுத்ததாகும். ஏதாவது மாற்றங்கள் நேர்ந்தால் உடனடியாக அறிவிக்கவேண்டும்.
  • ஆதாரவரியுடன் மேலும் பல கழிப்பனவுகள் இடம்பெறலாம். உ+மாக 3 வது ஏற்பாடுகள், கடனுக்குரிய வட்டி, அதிக நோய் சம்பந்தப்பட்டசெலவுகள் என்பன.
  • சொத்து இருந்தால் அந்தத் தகவலைத் தெரியப்படுத்தி அதற்கான வரியைத் தனியாகக் கட்ட வேண்டும்.
  • வருடத்திற்கு 120'000 பிராங்குகள் வருமானமிருப்பின் ஆண்டு வருமானத்தகவலைச் சமர்ப்பிக்க வேண்டும் (ஒழுங்கான வரிவிதித்தல்).
  • மணம்முடித்த கணவனோ மனைவியோ சுவிஸ் கடவுச்சீட்டு உள்ளவராகவோ அல்லது நிரந்தர வதிவிட உரிமை C உள்ளவராகவோ இருந்தால் ஒரு வருமானத்தகவல் பத்திரத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். (ஒழுங்கான வரிவிதித்தல்)

மாநில வரி நிர்வாகம் (Kantonales Steuerverwaltung) ஆதார வரி பற்றிய மேலதிகத் தகவல்களை அறியத்தரும். வரிகள் சொத்துகள் பற்றிய சந்தேகங்களிருப்பின் மாநில வரி நிர்வாகம் (Kantonales Steuerverwaltung) அல்லது வதிவிடக் கிராமசபைகளிலுள்ள நிதி நிர்வாகத்திடம் (Finanverwaltung) கேட்டு உதவி பெறலாம்..

நடைமுறை வரி விதித்தல்

சுவிஸ் கடவுச்சீட்டு அல்லது நிரந்தர வதிவிட உரிமை C உள்ளவர்கள் நடைமுறையான வரி கட்ட வேண்டும் (ordentliche Besteuerung). அவர்களின் சம்பளத்தில் வரி கழிக்கப்பட மாட்டாது. அவர்கள் தமது வரித்தகவல்களை (Steuererklärung) நிரப்பியனுப்பிப் பின்பு கட்டணமாகச் செலுத்தலாம். Kanton Basel-Landschaftல், நடப்பு ஆண்டிற்கான வரிகள் தற்காலிகமாக முன்கூட்டியே கணக்கிடப்படுகின்றன (Vorausrechnung).

வரித்தகவல்களை நிரப்புவது சுவிஸ் மக்களுக்கும் சிக்கலான விடயம். முதல் தடவையாக வரித்தகவல்களை நிரப்புவதானால் யாரிடமாவது உதவி கோருவது புத்திசாலித்தனம். சமர்ப்பிப்பதற்கான குறிப்பிட்ட இடம் (கிராமசபை அல்லது மாநில வரி நிர்வாகம்) வரி கணக்கீட்டு அறிக்கையின் முன்புறத்தில் அச்சிடப்பட்டுள்ளது.