பகிரங்கப் போக்குவரத்து
சுவிஸின் பகிரங்கப் போக்குவரத்து (ÖV) ஒரு உயர்ந்த நிலை வகிக்கிறது. ஓவ்வொரு இடங்களையும் ஒவ்வொரு மணித்தியாலத்திற்கும் பல தடவை அடையக்கூடியதாக இருப்பதால் அதிகமானோர் புகையிரதம் அல்லது பஸ்ஸைப் பாவிக்கிறார்கள். இதில் பிரயாணம் செய்வது ஓரளவு அதிக செலவாயிருந்தாலும் காசு மிச்சம் பிடிக்கக் கூடியமாதிரி பல வழிகளும் உண்டு. ஒரு சந்தா அல்லது மலிவுக்காட் வாங்குவதும் பிரயோசனப்படும்.மிகவும் மலிவான அரை விலைச்சந்தாவுடன் (Halbtaxabo) உதாரணத்திற்கு சுவிஸ் முழுவதும் அரைவாசி விலையில் பிரயாணம் செய்யலாம்.
இடது, தொடர்பு
SBB / அரைக் கட்டண பயண அட்டை பற்றிய தகவல் (DE)