துவிச்சக்கர வண்டியிலோ (Velo) அல்லது நடந்தோ வெளியே செல்லுதல்
Basel-Landschaft நகரமும் கிராமசபைகளும் துவிச்சக்கர வண்டியோடிகளுக்கும் நடப்பவர்களுக்கும் கவர்ச்சியானதும் பாதுகாப்பானதுமாகும். இதனாலேயே குறைந்த தூரங்களுக்கு அதிகமானோர் காரைத் தவிர்க்கின்றனர். அதிகமான இடங்களில் விசேட துவிச்சக்கரவண்டிப்பாதைகளும் ஒற்றையடிப்பாதைகளும் உள்ளன. பாதசாரிகளுக்கென மஞ்சள் கோடுகளும் அதில் பாதசாரிகளுக்கு வாகனங்களைவிட எப்போதும் முன்னுரிமை (வீதியைக் கடக்கும் போது சமிஞ்சை விளக்கு இல்லாவிடின்) Basel-Landschaft மாநிலத்தில் அதிகமான அழகான நடை பாதைகளும் - மலையேறும் பாதைகளும் உங்கள் ஓய்வு நேரங்களைப் பயன்படுத்தக்கூடிய மாதிரி உள்ளன. மலையேறும் பாதைகள் மஞ்சள் நிற வழிகாட்டிகளால் குறிக்கப்பட்டீருக்கும்.