டொச்மொழி கற்றல்

டொச் சரியாகப் படிக்கவேண்டுமானால் ஒரு டொச் வகுப்புக்குப் போவது பரிந்துரை செய்யப்படுகிறது. பாசில் பிரதேசத்தில் டொச் வகுப்புகள் பல வகை வாழ்க்கைச் சூழ் நிலைகளிலும் பரந்து சீரமைக்கப்பட்டுள்ளது.

ஜெர்மன் வகுப்பைக் கண்டறியவும்

வசதி வாய்ப்புக்கள்

பாசில் பிரதேசத்தில் மொழி வகுப்புகள் வித்தியாசமான இலக்குகள் கொண்ட குழுக்களாக பல வழங்குநர்களால் நடத்தப்படுகின்றன. சில வழங்குநர்கள் வணிக நோக்கத்திற்காகவும் மற்றவை இலாபத்திற்காகவோ அல்லது மாநிலமளவிலோ நடத்தலாம். எவர் லத்தீன் எழுத்துக்களை எழுதத்தெரியாமல் இருக்கிறாரோ அல்லது எழுத வாசிக்கத் தடுமாறுகிறாரோ அவர் எழுத்துவகுப்புக்குப் Alphabetisierungskurs) போகலாம். வகுப்புக்குப் போக முன்பு வகுப்பின் தன்மை அதற்குரிய கட்டணம் பற்றி அறிந்திருக்கவேண்டும்.பெற்றோர்கள் தம் பிள்ளைகளுடன் போவதற்கென, குழந்தைகள் பராமரிப்புடன் கூடிய விசேட வகுப்புகள் உள்ளன. இந்த வாய்ப்புகள் பற்றி Ausländerdienst Baselland (ald) அல்லது வதியும் கிராமசபை அறியத்தரும்.

மொழியின் தரம்

ஒரு நபர் எவ்வளவு நன்றாக ஜெர்மன் பேசுகிறார் என்பதை "பொதுவான ஐரோப்பிய குறிப்புக் கட்டமைப்பு" மூலம் அளவிட முடியும். இதன் சுருக்கம் GER. GER என்பது மொழிக்கான தரநிலை. இது ஆறு நிலைகளைக் கொண்டுள்ளது: உங்களிடம் A1 அல்லது A2 நிலை இருந்தால், உங்களுக்கு ஜெர்மன் மொழி பற்றிய அடிப்படை அறிவு இருக்கும். நீங்கள் C1 அல்லது C2 நிலையை அடைந்தால், நீங்கள் நன்கு முன்னேறிவிட்டீர்கள் என்று அர்த்தம்.

  • சுவிட்சர்லாந்தில் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்பயிற்சியை மேற்கொள்ள விரும்புகிறீர்களா? எனில் உங்களுக்கு நிலை B1 அல்லது B2 தேவை.
  • நீங்கள் ஒரு பல்கலைக்கழகத்தில் படிக்க விரும்பினால், உங்களுக்கு நிலை C1 அல்லது C2 தேவை.

நிதி உதவி

டொச் வகுப்புக்கு வழமையாகத் தாமே பணம் செலுத்தவேண்டும். இதன் கட்டணங்கள் இடத்துக்கிடம் வித்தியாசப்படும். இதற்காக (ஒரு வகுப்பிற்குரிய கட்டணம்) ஒப்பிட்டுப் பார்ப்பது. பிரயோசனப்படும் ..சில வகுப்புகளுக்கு Basel-Landschaft மாநிலம் அல்லது கிராமசபை நிதி உதவி செயவதால் படிப்பவர்களுக்கு மலிவாக முடியும்.