மொழி

நீங்கள் Basel-Landschaft சென்று விட்டீர்கள் ஆனால் இன்னும் ஜெர்மன் பேசத் தெரியவில்லையா? எனில் நீங்கள் விரைவில் ஜெர்மன் மொழியைக் கற்றுக் கொள்ளத்தான் வேண்டும். நீங்கள் ஜெர்மன் மொழியைப் பேசினால் நாட்டையும் அதன் மக்களையும் நன்கு அறிந்து கொள்வீர்கள். மேலும் நீங்கள் வேலை தேடுவதும் எளிதாக இருக்கும்.

உயர் டொச் மொழி / சுவிஸ் டொச் மொழி

சுவிட்சர்லாந்தில் நான்கு தேசிய மொழிகள் உள்ளன: டொச், பிரெஞ்ச், இத்தாலி, ரெட்ரொமானிஷ். Basel-Landschaft மாநிலத்தில் ஜெர்மன் அதிகாரப்பூர்வ மொழி. உயர் டொச் மற்றும் சுவிஸ் டொச் உள்ளது.

  • உயர்தனி டொச் (Standarddeutsch)
    டொச் மொழி பேசும் சுவிட்சர்லாந்தில் உள்ளவர்கள் உயர்தனி டொச் எழுதுகிறார்கள். அவர்கள் பள்ளியிலும் சில சமயங்களில் வானொலி மற்றும் தொலைக்காட்சியிலும் கூட உயர்தனி டொச் பேசுகிறார்கள்.
  • சுவிஸ் டொச் (Schweizerdeutsch)
    அன்றாட வாழ்வில் மக்கள் பெரும்பாலும் சுவிஸ் டொச் பேசுகிறார்கள். நீங்கள் ஏற்கனவே நன்றாக டொச் பேசுபவராயினும், சுவிஸ் டொச் உங்களுக்குப் புரிந்து கொள்வது கடினம். ஏதாவது புரியவில்லையா? எனில் மக்களை நீங்கள் உயர்தனி டொச் மொழியைப் பேசுமாறு கேட்கத் தயங்க வேண்டாம். நீங்களும் பேச வேண்டியது இல்லை. ஆனால் சிறிது காலம் கழித்து நீங்கள் அதை புரிந்து கொள்ள வேண்டும் என்பது மிகவும் முக்கியம்.

டொச் மொழியும் பிள்ளைகளும்

உங்கள் குழந்தை டொச் அல்லாத வேறு மொழியே பேசுகிறதா? எனில் அது கூடிய விரைவில் டொச் மொழி பேசும் குழந்தைகளை அறிந்து கொள்ள வேண்டும். உங்கள் குழந்தை கற்றுக்கொள்வதற்கு இதுவே மிக விரைவான வழியாகும். எடுத்துக்காட்டாக உங்கள் குழந்தை ஒரு விளையாட்டுக் குழுவிற்குச் செல்லலாம். பெற்றோர்கள் மற்றும் குழந்தைகளுக்குச் சிறப்பு சலுகைகளும் உள்ளன.

நீங்களும் உங்கள் குழந்தைக்கு மொழி வளர்ச்சியில் உறுதுணையாக இருக்க முடியும். உங்கள் குழந்தையுடன் நிறைய பேசுங்கள், உங்கள் குழந்தை சொல்வதைக் கேளுங்கள் மற்றும் கதைகளைச் சொல்லுங்கள். உங்களுக்கு நன்றாகத் தெரிந்த மற்றும் பேச விரும்பும் மொழியில் பேசுங்கள்.

Übersetzungen / உரையாடல் மொழிபெயர்ப்புச் சேவை (DE)

நீங்கள் பாசிலுக்குப் புதியவர் மற்றும் ஜெர்மன் இன்னும் நன்றாகப் பேச இயலவில்லையா? எனில் உங்களுக்கு யாராவது விஷயங்களை விளக்க வேண்டும். ஒரு வேளை நீங்கள் உறவினர்கள் அல்லது அறிமுகமானவர்களிடம் கேட்கலாம்.

ஆனால் சில உரையாடல்கள் கடினமானவை அல்லது மிகவும் தனிப்பட்டவை. உதாரணமாக, மருத்துவமனையில் அல்லது ஒரு அதிகாரியுடன் சந்திப்பு.எனில் நீங்கள் ஒரு கலாச்சார ரீதியான மொழிபெயர்ப்பாளரை வேண்டலாம். இவர்கள் குறிப்பாக வேறு கலாச்சாரத்திலிருந்து வருபவர்களுக்கான தொழில் வல்லுநர்கள். இந்தத் தொழில் வல்லுநர்கள் உங்கள் கலாச்சாரத்தை நன்கு அறிந்திருப்பார்கள். மேலும் நீங்கள் எல்லாவற்றையும் நன்றாகப் புரிந்து கொள்ளுமாறு அவர்களால் உங்களுக்கு விளக்க முடியும்.

உங்களுக்கு அரசு அலுவலகத்தில் இருந்து வரும் கடிதங்கள் புரியவில்லையா? அல்லது நீங்கள் ஒரு படிவத்தை நிரப்ப வேண்டுமா அல்லது எழுத வேண்டுமா? இங்கே உதவி பெறவும்:

  • ald உரையாடல் மொழிபெயர்ப்புச் சேவை
  • Schreibstube Liestal SRK

குடிவரவு மற்றும் சிவில் சட்டத்தில் மொழி நிலைகள்

ஒருவேளை நீங்கள் குடியிருப்பு அனுமதி(B) அல்லது நிலையாக வாழ அனுமதிக்கு(C) விண்ணப்பிக்க விரும்புகிறீர்கள் அல்லது நீங்கள் உள்நாட்டு குடிமையாக்கம் பெற விரும்புகிறீர்கள். உங்கள் முதன் மொழி டொச் இல்லையா?எனில், நீங்கள் நன்றாக பேசுகிறீர்கள் என்பதற்கு ஆதாரம் தேவை.

விண்ணப்பிக்க உங்களுக்கு என்னென்ன தேவை என்பது பற்றிய தகவல்களை இங்கே காணலாம்:

  • இடம்பெயர்வு அலுவலகம் (Amt für Migration und Bürgerrecht)