உள்வாங்குதல் (ஒருங்கிணைப்பு)

நீங்கள் Basel-Landschaft மாகாணத்தில் வசிக்கிறீர்கள் என்றால், உங்களுக்கு சில உரிமைகள் உள்ளன. நீங்கள் ஆணா அல்லது பெண்ணா, நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள், எந்த மொழி பேசுகிறீர்கள், எந்த மதத்தை நம்புகிறீர்கள் அல்லது உங்களுக்கு என்ன குறைபாடு உள்ளது என்பது முக்கியமல்ல. அதே நேரத்தில், நீங்கள் சட்டத்திற்குக் கீழ்ப்படிய வேண்டும். மேலும் பொருளாதார ரீதியாக உங்களை நீங்கள் கவனித்துக் கொள்வதும் மற்றும் ஜெர்மன் மொழியை கற்றுக் கொள்வதும் முக்கியம். இதைப் பற்றிய தகவல்களை நீங்கள் இங்கே பெறலாம்.

முக்கியமான அடிப்படைக் கோட்பாடு

நீங்கள் சுவிட்சர்லாந்தில் வசிக்கிறீர்கள் என்றால் நீங்கள் கூட்டாட்சி அரசியலமைப்பு மற்றும் சட்டங்களுக்கு கீழ்ப்படிந்து நடக்க வேண்டும். இதன் பொருள், எடுத்துக்காட்டாக: எல்லா மக்களும் ஒருவரை ஒருவர் மதிக்க வேண்டும் எல்லா மக்களும் சமமாக நடத்தப்பட வேண்டும் யாரும் பாகுபாட்டுடன் நடத்தப்படக்கூடாது. நீங்கள் Basel-Landschaft வசிக்கிறீர்கள் என்றால், ஜெர்மன் மொழியைக் கற்க வேண்டும். பொருளாதார ரீதியாகவும் உங்களை நீங்கள் கவனித்துக் கவனித்துக் கொள்ள வேண்டும்.

ஒருங்கிணைவு என்பது இரு பக்கத்தினரும் தம் பங்களிப்பைச் செய்தால் மட்டுமே வெற்றியளிக்கும். அதனாலேயே இந்நாட்டு மக்கள் வெளிநாட்டவர்களுடன் திறந்தமனதுடன் பழக எதிர்பார்க்கப்படுகிறது.

சுய பொறுப்பு

கூட்டமைப்பு, மாநிலங்கள் மற்றும் நகராட்சிகள் உங்களுக்குப் பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார வாழ்க்கைக்கு நியாயமான அணுகல் இருப்பதை உறுதி செய்கிறது. ஆனால் நீங்களும் உங்களை ஒருங்கிணைத்துக் கொள்வதில் அக்கறை காட்ட வேண்டும். நீங்கள் ஒருங்கிணைப்புச் சலுகைகளைப் பயன்படுத்திக் கொள்வீர்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

சமூக வாழ்க்கையில் பங்கெடுத்தல்

இவ்வாறாக நீங்கள் உங்களை ஒருங்கிணைக்க முடியும்: கழகங்களில் நீங்கள் புதிய நபர்களை நன்கு அறிந்து கொள்ளலாம் அல்லது உங்கள் குடியிருப்புப் பகுதியில் நடைபெறும் திருவிழாக்கள் மற்றும் நிகழ்வுகளுக்குச் செல்லுங்கள்.
ஆரம்பத்தில் இது சற்று கடினமாக இருக்கலாம். பல மற்ற நாடுகளை சேர்ந்தவர்களுக்குத் திறந்த மனதுடன் இருப்பதில்லை. ஆனால் சில காலம் கழித்து பெரும்பாலான மக்கள் தங்கள் கட்டுப்பாட்டில் இருந்து வெளியே வருகிறார்கள். இதனால் விட்டு விடாதீர்கள்.

தகவல்கள் / உதவிகள்

Basel-Landschaft மாநிலத்தில் புதிதாகக் குடியேறியவர்களுக்காக பல விதமான தொடக்க நிலையங்கள் உள்ளன. முதலாவது சிறந்த தொடக்க நிலையம் எப்போதும் கிராமசபை ஆகும். அத்துடன் வெளிநாட்டவர்களுக்கென விசேடமான தொடக்க நிலையங்களும் உள்ளன.

சுவிட்சர்லாந்தில் வாழ்க்கை மற்றும் பிற தலைப்புகள் பற்றிய தகவல்கள்:

  • Baselland குடிவரவு சேவையில் (Ausländerdienst Baselland)

புகலிடச் சட்டம் மற்றும் புலம்பெயர்வோர் சட்டம் பற்றிய தகவல்கள்:

  • Baselland தொடர்பு மையம் (Anlaufstelle Baselland)

டொச் மொழி பேசத் தெரியாதவர்கள் டொச் மொழி பேசத் தெரிந்த யாரையாவது மொழி பெயர்க்கக் கூட்டி வரலாம், அல்லது ஒரு உரையாடல் மொழிபெயர்ப்பாளரை உதவி செய்யக் கேட்கலாம். சில இடங்களில் வேறு மொழிகளிலும் தகவல்கள் தரப்படும். சில மொழிபேசும் குழுக்களுக்குச் சிறப்புச் சலுகைகள் உள்ளன.