இறப்பு

மரணம் ஏற்பட்டால், உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

மறைந்தோர் உடலைக் காட்சிக்கு வைத்தல்

இறப்பு ஏற்பட்டால், ஒரு மருத்துவரால் இறப்புச் சான்றிதழைப் பூர்த்தி செய்ய வேண்டும். அதன் பிறகு, இறப்பைப் பற்றி பொறுப்பான பதிவு அலுவலகத்திற்கு (Zivilstandsamt) உடனடியாகத் தெரிவிக்கப்பட வேண்டும். மருத்துவமனை, ஓய்வுபெற்றோர் அல்லது முதியோர் இல்லத்தில் மரணம் நிகழ்ந்தால், மருத்துவமனை அல்லது வீட்டு நிர்வாகம் மரணத்தை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளது. இல்லையெனில், இறப்பு குறித்து உறவினர்கள் தெரிவிக்க வேண்டும்.

விரும்பினால், கல்லறைக்கு எடுத்துச் செல்வதற்கு அல்லது வெளி நாட்டிற்கு ஒரு இறந்த உடலை எடுத்துச் செல்வதற்கு இறுதிச்சடங்கு சேவையை (Bestattungsdienst) அழைக்கலாம். இறந்தோர் இடத்திற்குப் பொறுப்பான பதிவு அலுவலகம் செயல்முறை மற்றும் தேவையான ஆவணங்கள் பற்றிய தகவல்களை வழங்குகிறது.