பொதுவான அவசர இலக்கம்: 112
இந்த இலக்கத்துடன் பொலிஸ் அவசர நிலையத்திற்கு தொடர்பு கொள்ளலாம். அவசரத்தின் வகையையும் விதத்தையும் பொறுத்து பொலிஸே மற்றைய இடங்களுடன் தொடர்பை ஏற்படுத்திவிடும். (உ+மாக தீயணைப்புப்படை).
அவசர இலக்கங்கள் தினமும் 24 மணிநேரமும் தொடர்பு கொள்ளக்கூடியவை. குறுகிய இலக்கங்கள் (3 இலக்கங்கள் ) இலவசமானவை. மற்றைய இலக்கங்களுக்கு சாதாரண தொலைபேசிக்குரிய கட்டணமே அறவிடப்படும்.
இந்த இலக்கத்துடன் பொலிஸ் அவசர நிலையத்திற்கு தொடர்பு கொள்ளலாம். அவசரத்தின் வகையையும் விதத்தையும் பொறுத்து பொலிஸே மற்றைய இடங்களுடன் தொடர்பை ஏற்படுத்திவிடும். (உ+மாக தீயணைப்புப்படை).
இந்த இலக்கத்துடன் பொலிஸ் அவசர நிலையத்திற்குத் தொடர்பு கொள்ளலாம்.
இந்த இலக்கத்துடன் தீயணைப்புப்படை நிலையத்துடன் தொடர்பு கொள்ளலாம்.
இந்த இலக்கத்தில் பாதுகாப்புச்சேவையின் செயற்பாட்டு நிலையத்துடன் தொடர்பு கொள்ளலாம்.
இந்த 144 இலக்கத்தில் உடனடி அம்புலன்ஸ் தேவைக்கோ அல்லது ஆபத்தின் தீவிரத்தை அறியமுடியாமலிருந்தாலோ (உதாரணமாக விபத்தின் பின்பு ) தொடர்பு கொள்ளலாம்.
மற்றைய மருத்துவப்பிரச்சனைகளுக்கு முதலில் குடும்பவைத்தியரைத் தொடர்பு கொள்ளவேண்டும். சிகிச்சை நிலையம் திறந்திருக்காத நேரங்களில் எப்போதும் ஒரு குடும்பவைத்தியர் அவசரசேவை இயங்கும். யார் அவசரசேவை வைத்தியர் என்பது குடும்பவைத்தியரின் தொலைபேசி அழைப்பை எடுத்தால் அதில் பதியப்பட்டோ அல்லது பிரதேசச் செய்தியிலேயோ அறியலாம். உயிருக்கு ஆபத்து இல்லாத சூழ்நிலைகளில் கூட, மருத்துவ அவசர அழைப்பு மையத்தை (MNZ) 061 261 15 15 அழைக்கலாம். இங்கு மருத்துவ ஆலோசனையும் சரியான அருகிலுள்ள இடமும் (வைத்தியர், வைத்தியசாலை) வழிகாட்டப்படும். தாமே ஒரு அவசர சிகிச்சைக்கு (வைத்தியசாலை/ அவசர சிகிச்சை) தேடிச் செல்வதும் சாத்தியப்படலாம்.
Medizinische Notrufzentrale MNZ / மேலதிகத் தகவல்களுக்கு
Basel-Landschaft மற்றும் Basel-Stadt மாநிலத்தில் எந்த மருந்தகம் அவசர சேவையில் (அவசர மருந்தகம்) உள்ளது என்பதை இந்த இலக்கத்தில் தொடர்பு கொண்டு அறியலாம். இந்த மருந்தகம் வழமையாகத் திறந்திருக்கும் நேரங்களைத் தவிர மற்றைய நேரங்களிலும் திறக்கும்.
Basel-Landschaft மாநிலத்தில் எந்தப் பல் வைத்தியர் அவசரசேவையில் இருக்கிறார் என்பதை இந்த இலக்கத்தில் தொடர்பு கொண்டு அறியலாம்.
யாராவது நஞ்சை விழுங்கினால் அல்லது சந்தேகப்பட்டால் இந்த இலக்கத்தில் உள்ள வைத்தியர்களும் நிபுணர்களும் உதவுவார்கள். அவர்கள் நஞ்சுபட்டால் என்ன செய்யும் என விளக்கம் தருவார்கள். உயிராபத்தானநிலையில் இருந்தால் உடனடியாக 144 இலக்கத்துடன் தொடர்பு கொள்ளலாம். இணையத்தளப் பகுதியில் நஞ்சு /நஞ்சூட்டல் பற்றிய விபரமான தகவல்களைக் காணலாம்.
நஞ்சு - அவசரம் / தொடர்புகளுக்கும் தகவல்களுக்கும் (EN)
தொலைபேசி இலக்கம் 143 (உதவும் கரங்கள், Dargebotene Hand) இல் யாராவது தம் பிரச்சனைகள் எந்த வகையாக இருந்தாலும் அவை பற்றி யாருடனும் பேச விரும்பினால் (டொச். பிரெஞ்.இத்தாலி மொழிகளில் ) பேசலாம். நெருக்கடியான சூழ்நிலைகளிலும் கவலையான கடினமான சந்தர்ப்பங்களிலும் தொடர்பு கொள்ளலாம். இங்கு பேசப்படுவது நம்பகமானது. அநாமதேயமானது. விரும்பினால் மட்டும் பொருத்தமான உதவிகள் வசதிகள் பற்றிய தகவல்களைப் பெறலாம். இங்கு ஈ - மெயில் மூலமோ அல்லது அரட்டை மூலமோ தொடர்பு கொள்ளலாம்.
வளர்ந்தவர்களுக்கான ஆலோசனை / தகவல்களுக்கும் (DE)
தொலைபேசி இலக்கம் 147 இல் சிறுவர்களும் இளையவர்களும் தம் பிரச்சனைகள் எந்த வகையாக இருந்தாலும் அவை பற்றி யாருடனும் பேச விரும்பினால் (டொச். பிரெஞ்.இத்தாலி மொழிகளில் ) பேசலாம். நெருக்கடியான சூழ்நிலைகளிலும் கவலையான கடினமான சந்தர்ப்பங்களிலும் தொடர்பு கொள்ளலாம். எந்நேரமும் நிபுணர்களைத் தொடர்பு கொள்ளலாம்.இங்கு பேசப்படுவது நம்பகமானது. அநாமதேயமானது. ஈ மெயில் குறுஞ்செய்தி அல்லது அரட்டை மூலம் தொடர்பு கொள்ளலாம்.
பெற்றோர் அவசர அழைப்பின் போது (Elternnotruf) பெற்றோருக்கும் மற்றவர்களுக்கும் உள்ள வளர்ப்புப் பற்றிய கேள்விகளுக்கு நிபுணர்கள் ஆலோசனை தருவார்கள். இங்கு சொந்தப் பிள்ளையின் அல்லது வேறு பிள்ளைகளின் நடவடிக்கைகளால் பதட்டப்பட்டாலோ அன்றி சுமையாக உணர்ந்தாலோ உதவி பெறலாம். சொந்தப்பிள்ளையோ அல்லது வேறு பிள்ளையோ உடல் / உளரீதியாகத் தவறாகக் கையாளப்படுவதாக அச்சப்பட்டாலும் பெற்றோர் அவசர அழைப்பை நாடலாம். இங்கு பேசப்படுவது நம்பகமானது விருப்பத்தின் பேரில் அநாமதேயமாகக் கையாளப்படும். ஈ மெயில் மூலமும் தொடர்பு கொள்ளலாம். மருத்துவக் கேள்விகளுக்கும் பெற்றோர் அவசர அழைப்பு தொடர்ந்தும் உதவி செய்யும்.
பெற்றோர் அவசர அழைப்பு / தகவல்களுக்கும் (DE)
beider Basel பெண்கள் காப்பகம் (Frauenhaus) 24 மணி நேரமும் வீடடு வன்முறையால் பாதிக்கப்படும் பெண்களுக்கு ஆலோசனையும் உதவியும் வழங்கக் காத்திருக்கிறது. அவர்களுக்காக உறவினர்களோ அன்றி நிபுணத்துவம் பெற்றவர்களோ இதனை நாடலாம். இங்கு பேசப்படுவது நம்பகமானது விருப்பத்தின் பேரில் அநாமதேயமாகக் கையாளப்படும். ஈ மெயில் மூலமும் தொடர்பு கொள்ளலாம் வீட்டு வன்முறையில் ஆண்கள் பாதிக்கப்பட்டாலும்கூட அது பற்றிய தொடர்பு விபரம் தொடர்ந்த ஆலோசனைகள் பற்றிய விளக்கமான தகவல்களைப் அறிய hallo-baselland.ch வில் தலையங்கம் குடும்ப வன்முறை