அதிகாரம் குவிவதை தடுக்குமுகமாக அரசானது சுவிஸ் மற்றும் மாநிலங்களில் மூன்று சுயாதீனமான தெரிவுகளை பிரித்துவைத்துள்ளது : சட்டத்தை உருவாக்குபவர் தெரிவு, சட்டத்தை நிர்வகிப்பவர் தெரிவு, மற்றும் நீதித்துறைத்தெரிவு. Basel-Landschaft மாநிலத்தில் பின்வரும் நிர்வாகங்கள் இந்த செயற்பாட்டை நடைமுறைப்படுத்துகின்றன:
- சட்டமன்றம்: மேல்சபை (Landrat) (90 அங்கத்தவர், 4 வருடங்களுக்கொரு முறை மக்களால் தெரிவு செய்யப்படுவர்
- நிறைவேற்றல்சபை: ஆளுனர் சபை (Regierungsrat) (5 அங்கத்தவர், 4 வருடங்களுக்கொருமுறை மக்களால் தெரிவு செய்யப்படுவர்)
- நீதிச்சபை: மாநில ரீதியாக உள்ள வேறுவேறான நீதிமன்றங்கள் மற்றும் மாவட்ட உரிமையியல் நீதிமன்றங்கள் (Zivilkreisgerichte).
அத்துடன் கிராமசபைகளிலும் சட்டசபைகள் (கிராமசபைக்கூட்டங்கள் அல்லது பாராளுமன்றம், (Gemeindeversammlung, Parlament), மற்றும் ஒரு நிர்வாகி (நகரபிதா அல்லது கிராமசபைபிரதிநிதி, Stadtrat, Gemeinderat) என்பன காணப்படுகின்றன. மத்திய நிர்வாக ரீதியில் சட்டமன்றம் 2 சபைகளை கொண்டுள்ளது: தேசிய மற்றம் நிர்வாகப்பிரதிநிதிகள் (National- und Ständerat). தேசிய அரசு (7 அங்கத்தவர்கள்) என்பது மத்திய அமைச்சர்கள் (Bundesrat). அத்துடன் தேசியரீதியிலும் வேறுவேறான நீதிமன்றங்கள் உள்ளன. உச்சநீதிமன்றமானது மிகவும் உயர்ந்தநிலையில் இருப்பதுடன் உதாரணமாக மாநில நீதிமன்றங்களின் தீர்ப்புக்களை மீளாய்வுக்கு தொடர்ந்து ஆராய அனுப்பக்கூடியதாக இருக்கிறது.